சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: திருப்போரூர் எம்எல்ஏ வழங்கினார்

திருப்போரூர்: முட்டுக்காட்டில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வழங்கினார். சென்னை அடுத்த முட்டுக்காட்டில் இயங்கிவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் நேற்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக, நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து. நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை விருந்தினராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்துகொண்டு, கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். இதையடுத்து, அவர்களுக்கான கற்றல் கற்பித்தல் பற்றிய புத்தகத்தினையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய நிறுவனத்தின் இயக்குநர் நச்சிகேதா ரவுட், துணை பதிவாளர் (பொறுப்பு) மற்றும் சிறப்பு கல்வி துறை தலைவர் காமராஜ், அலுவலர்கள், பெற்றோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: திருப்போரூர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: