திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (45), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் வெளியில் பெயிண்டர் வேலைக்கு சென்று விட்டு பேருந்தில் வந்து தண்டரை கூட்ரோடு பகுதியில் இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில், சற்று இளைப்பாற அங்குள்ள சாலை ஓரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செல்வக்குமார் மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வாகனம் மோதி பெயிண்டர் தலை நசுங்கி பரிதாப பலி appeared first on Dinakaran.