இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்நிலையில், புயல் கரையை கடந்து 2 நாட்களான நிலையிலும், நேற்று காலை வரை சென்னை புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இருந்த போதிலும் அதிகளவில் மழை பெய்யாததால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் தற்போது 20.54 அடி உயரமும், நீர்வரத்து மணிக்கு 1479 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2738 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது. ஏரியில் இருந்து 125 கன அடி நீர் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 20 அடி நீர்மட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஏரியின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கும்போது, பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரிநீர் அதிகளவில் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது நீர்வரத்து குறைந்து வருவதால், கோடை கால தேவையை கருத்தில் கொண்டு தண்ணீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
The post மழைப்பொழிவு குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.