பெரிய துரோகி டிடிவி ஒழிக… சொந்த கட்சியினரே உருவப்படத்தை எரித்து போராட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம்தேதி நடைபெற உள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இக்கூட்டணியில் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான உத்தேச பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதில், சைதாப்பேட்டை, சோளிங்கர் (அ) திருப்பத்தூர், பூவிருந்தவல்லி, நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை சென்ட்ரல், தஞ்சாவூர், காரைக்குடி, திருச்சி மேற்கு மற்றும் மன்னார்குடி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.

இதில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதி இடம் பெறவில்லை. பாபநாசம் தொகுதியில் அமமுக மாநில துணை பொதுச்செயலாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளருமான ரெங்கசாமி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், அமமுக உத்தேச பட்டியலில் பாபநாசம் இடம்பெறாததை அறிந்து வெகுண்டு எழுந்த கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அமமுக விவசாய பிரிவு இணை செயலாளர் சாக்கோட்டை நடுப்பிள்ளை தலைமையிலான நிர்வாகிகள் சாக்கோட்டை பழைய பாலம் அருகே டிடிவி.தினகரன் புகைப்படத்தை நேற்று தீயிட்டு எரித்தனர்.

தொடர்ந்து ரெங்கசாமியின் பெயரை சேர்த்து வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ரெங்கசாமிக்கு சீட்டு அறிவிக்காத டிடிவி.தினகரன் ஒழிக, டிடிவி தினகரன் பெரிய துரோகி, அவரது குடும்பமும் 11 சீட்டும் அழிந்துவிடும், அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் அமமுக தோற்கடிக்கப்படும் என ஆக்ரோஷத்துடன் கண்டன கோஷமிட்டனர்.

Related Stories: