இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பார்வின்உள்பட 55 நிர்வாகிகள், கட்சியில் இருந்து விலகுவதாக நெல்லையில் நேற்று காலை தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் கண்ணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பார்வின் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: தமிழ் தேசியம், தமிழர் என்ற கண்ணோட்டத்துடன் கட்சிக்கு வந்தோம். ஆனால் சீமான் இன்று ஒன்று…. நாளை ஒன்று என முரணாக பேசுகிறார்.
நிர்வாகிகள் யாருக்கும் மரியாதையாக மேடையில் பேசுவதில்லை. ஒருமையில் பேசுகிறார். அவருக்கு கொள்கை இல்லை. அவரது கட்சியில் அடிமையாக இருக்க வேண்டியுள்ளது. . ரஜினியை முதலில் கேவலமாக பேசினார். அவரை சந்தித்து விட்டு வந்து நண்பர் என்கிறார். சங்கி என்றால் நண்பர் என்கிறார். நடிகர் விஜய்யை முதலில் நண்பர் என்று கூறினார்.
அவரது மாநாட்டிற்கு பிறகு ரோட்டில் அடிபட்டு சொத்து போ…. என்கிறார். நாங்கள் கட்சிக்காக ரூ.15 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தோம். ஆனால் வெளியே போ என்கிறார். எங்களது உழைப்பில் தான் 86 ஆயிரம் ஓட்டுக்கள் நெல்லை தொகுதியில் கிடைத்தது. கட்சிக்காக உழைத்து எங்களது உழைப்பையும், பொருளாதாரத்தையும் இழந்தது தான் மிச்சம். இதனால் தொகுதி, பகுதி நிர்வாகிகள் என 55 பேர் ஒட்டுமொத்தமாக விலகுகிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.
The post நெல்லை நாதக செயலாளர், நிர்வாகிகள் கூண்டோடு விலகல்: சீமான் அடிமையாக்குவதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
