ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதலமைச்சராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடக்கும் பதவியேற்பு விழாவில் ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13 மற்றும் 20ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜ கூட்டணி 24 இடங்களிலும் வென்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இந்தியா கூட்டணிக்கு கிடைத்ததையடுத்து ஹேமந்த் சோரன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மோர்ஹபதி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார்.

ராஞ்சியில் நடக்கும் பதவியேற்பு விழாவில் ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ்குமார் கங்வார் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

மேலும் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

The post ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்! appeared first on Dinakaran.

Related Stories: