அவ்வாறு உருவானால் அதற்கு ‘பெங்கல்’ என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. பெங்கல் புயல் உருவாகி வட தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை இடி, மன்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.