9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும்.
6 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.
நவ.30-ல் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நவ.30-ல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவ.30-ல் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
நவ.30-ல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் நவ.30-ல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நவ.30-ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நவ.30-ல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் கனமழை பெய்யும்.
The post வங்க கடலில் நகரத்தொடங்கிய ஃபெங்கல் புயல்.. அதி கனமழை எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? appeared first on Dinakaran.