கேரளாவின் பாரம்பரிய கசிவு சேலை அணிந்து வந்த பிரியங்கா காந்தி.. வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்று கொண்டார். வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதன்படி காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.

இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ந் தேதி எண்ணப்பட்டது. இதில் வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். முதல் முறையாக நேரடியாக வயநாடு தொகுதியில் எம்.பியாக போட்டியிட்டு அதில் வாரலற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று பிரியங்கா காந்தி நாடாளுமன்ற மக்களவையில் வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்று கொண்டார். பிரியங்கா காந்தி கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பதவியேற்று கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிபிரமாணம் செய்து வைத்தார். நாடாளுமன்ற அவையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அண்ணன் ராகுல் காந்தியை, பிரியங்கா காந்தி வணங்கிவிட்டு சென்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

The post கேரளாவின் பாரம்பரிய கசிவு சேலை அணிந்து வந்த பிரியங்கா காந்தி.. வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: