அங்கு கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவன் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் ஆர்.ரகுபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த 10 ஆண்டுகளில் சென்னை கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 88 வழக்குகள் விசாரணையில் உள்ளன. 55 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 33 வழக்குகள் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பது, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்துவது, ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து திட்டம் வகுக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது, உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
The post சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் மீது 10 ஆண்டில் 231 வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை appeared first on Dinakaran.