இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சி சார்பில் சிறையில் இருந்தபடியே அவர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து திங்களன்று இம்ரான் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் ஏற்பட்ட மோதலில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினார்கள்.
இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது . அடுத்த கட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post போலீசார் தாக்கியதில் 4 பேர் பலி: இம்ரான் கட்சியின் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.