எல்லையில் போர் நிறுத்தம் தாய்லாந்து -கம்போடியா புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்

பாங்காக்: தாய்லாந்து -கம்போடியா எல்லைப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருநாடுகளும் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன. தாய்லாந்து -கம்போடியா இடையே நூற்றாண்டுகளுக்கும் மேலாக எல்லையில் பிரச்னை நீடித்து வருகின்றது. கடந்த ஜூலையில் இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் மோதல் வெடித்தது.

5 நாட்கள் இது நீடித்த நிலையில் அமெரிக்கா மற்றும் மலேசியாவின் சமரச முயற்சியின்பேரில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் எல்லையில் உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

பிராந்தியத்திற்கான போட்டி உரிமைகோரல்கள் தொடர்பாக தங்களது எல்லையில் பல வாரங்களாக நீடித்த ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்தும் கம்போடியாவும் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதோடு, இரு தரப்பில் இருந்தும் எந்த ராணுவ நகர்வுகளும் இருக்கக்கூடாது, ராணுவ நோக்கங்களுக்காக எந்த நாட்டின் வான்வெளியையும் மீறக்கூடழத என்று ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: