மனிதாபிமான உதவிகள் நிறுத்தம் ஆப்கனில் பட்டினியால் வாடும் லட்சக்கணக்கான மக்கள்: ஐநா கவலை

காபூல்: ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதாபினமான உதவிகள் நிறுத்தப்பட்டதால் லட்சக்காணக்கான மக்கள் பட்டினியால் வாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தள்ளாடும் பொருளாதாரம், தொடர்ச்சியான வறட்சி, இரண்டு பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானிய அகதிகள் அதிக அளவில் நாட்டிற்கு திரும்பி வந்தது போன்ற காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான உதவிகளும் தடைபட்டுள்ளன. இதன் விளவைாக வீட்டுவசதி மற்றும் உணவு உள்ளிட்ட வளங்களுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஐநாவின் மனிதாபிமான பிரிவு தலைவர் டாம் பிளெட்சர் கடந்த சில நாட்களுக்கு முன், பாதுகாப்பு கவுன்சிலிடம், சமீபத்திய நிலநடுக்கங்கள் மற்றும் மனிதாபிமான உதவி அணுகல் மற்றும் பணியாளர்கள் மீதான அதிகரித்து வரும் கட்டுப்பாடுகள் உட்பட ஒன்றோடொன்று சேரும் அதிர்ச்சிகளால் நிலைமை மோசமடைந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

2026ம் ஆண்டில் ஏறத்தாழ சுமார் 22மில்லியன் ஆப்கானியர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவி தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். நன்கொடையாளர்களின் பங்களிப்பு குறைந்ததால் உயிர்காக்கும் உதவி மிகவும் அவசரமாக தேவைப்படும் 3.9மில்லியன் மக்கள் மீது ஐநா கவனம் செலுத்தும். கடந்த நான்கு ஆண்டுகளில் 7.1மில்லியன் ஆப்கானிய அகதிகள் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: