வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாததால் ஏஜென்ட் தற்கொலை

 

மங்கலம்பேட்டை, நவ. 27: வேப்பூர் அடுத்த இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் அய்யாதுரை(50). இவர் வேப்பூரில் இயங்கி வரும் ஒரு வங்கியின் பின்புறத்தில், வேலைக்காக வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் விசா கன்சல்டன்சி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார்.வெளிநாடு செல்வதற்காக இவரிடம் பணம் கொடுத்தும், வெளிநாடு செல்ல முடியாமல் போனவர்கள், அய்யாதுரையிடம் சென்று அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், அய்யாதுரை தான் பணம் அனுப்பிய மெயின் ஏஜென்சியில் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி தரவில்லை என்பதால், நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் உள்ள தனது அண்ணன் மகன் இளையராஜா என்பவரின் வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, அய்யாதுரையின் தம்பி மணிவேல் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறன்றனர்.

The post வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாததால் ஏஜென்ட் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: