கோவை, நவ. 27: கோவை மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75ம் ஆண்டையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்புறம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச்செழியன் தலைமையில் வக்கீல்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், திமுக சட்டத்துறை மாநில இணை செயலாளர் வக்கீல் கே.எம்.தண்டபணி, நிர்வாகிகள் ஜி.டி.ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ராஜப்பன், மணிவேல், அசோக்குமார், ராஜமாணிக்கம், முத்துவிஜயன், கண்ணன், விஜயகுமார், எலிசபெத் ராணி, ரவிச்சந்திரன், தமிழ்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.
The post திமுக வக்கீல்கள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.