3 பேர் மீது குண்டாஸ்

கோவை, நவ.21: கோவை அன்னூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கோகுல் (26), வினோத்குமார் (30), சந்தோஷ் (27) ஆகியோரை கைது செய்யப்பட்டனர். கோவை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து 3 பேரும் பல்வேறு பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக அன்னூர் போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.

The post 3 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Related Stories: