சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் புகுந்த பாகுபலி

 

மேட்டுப்பாளையம், நவ.22: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட வச்சினம்பாளையத்தில் உள்ள ரங்கசாமி(50) என்பவரது விவசாய நிலத்திற்குள் நுழைந்த பாகுபலி யானை அங்கு கால்நடைகளுக்காக வளர்க்கப்பட்டு வந்த மசால் புற்களை மேய்ந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து யானையின் சப்தம் கேட்டு விவசாயிகள் அங்கு வந்து பார்த்த போது யானை குடியிருப்பின் அருகே வந்து விட்டது.

இந்த பக்கம் வராத யானை, அந்த பக்கம் போ என சப்தமிட்டனர். குடியிருப்பை தொட்டவாறு ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளும் கட்டி வைக்கப்பட்டிருந்ததால் யானை அதன் அருகாமையில் வந்து அதனையும் தாக்கி விடுமோ? என ரங்கசாமியின் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் டார்ச் லைட் அடித்தும்,சப்தம் எழுப்பியும் அதனை விரட்டியதால் அங்கிருந்து காட்டு யானை பாகுபலி வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது.

இதனை அந்த குடும்பத்தினர் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தொடர்ந்து சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்வது வருவதோடு,மனிதர்களையும் பாகுபலி யானை அச்சுறுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

The post சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் புகுந்த பாகுபலி appeared first on Dinakaran.

Related Stories: