கோவை, நவ.26: கோவை பெரியக்கடை வீதி தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர் மற்றும் வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் உக்கடத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவர் பூபதி தலைமை தாங்கினார். டவுன்ஹால் பகுதியில் உள்ள கடை வீதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்த மாநகராட்சி ஏற்பாடு செய்து தர வேண்டும்.
நகை கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் சார்ந்த அரசின் உதவிகளை பெற்றுத்தர சங்கம் முயற்சி செய்யும். சங்கத்தின் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா, பொதுச்செயலாளர் ரியாசுதீன், இப்ராஹிம் மற்றும் நகை, துணிக்கடை வியாபாரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
The post பெரியக்கடை வீதி தங்க நகை தொழிலாளர், வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.