காசிமேடு எஸ்என் செட்டி தெரு வழியாக வந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்தனர். அப்போது பேருந்து டிரைவர் ஹாரன் அடித்து வழிவிடும்படி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த எர்ணாவூர் குப்பத்தை சேர்ந்த சூர்யா (28), அவருடைய மனைவி கல்யாணி (26) ஆகியோர் டிரைவரிடம் சண்டை போட்டுள்ளனர்.
இதில் கோபமடைந்த கல்யாணி டிரைவரை செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. டிரைவர் கல்யாணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டு புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வழி விடுமாறு கூறியதால் எம்டிசி டிரைவர் பெண் அடிதடி appeared first on Dinakaran.