மேலும் கடந்த 2012ம் ஆண்டு, வங்கதேசத்திலிருந்து திரிபுரா மாநிலம் வழியாக, இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவி வந்துள்ளார். அதன் பின்பு முஜீப் உசேன், திரிபுராவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர் இந்தியர் என்று கூறி, போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவைகளையும் பெற்றுள்ளார். பிறகு முஜிப் உசேன் கடந்த 2017ம் ஆண்டு, திரிபுராவில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தார். சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் வண்டலூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஓட்டல்களில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முஜீப் உசேனுக்கு, மலேசிய நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இவரிடம் ஏற்கனவே போலியான இந்திய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இருந்ததால் வண்டலூர் முகவரி கொடுத்து, போலியான இந்திய பாஸ்போர்ட் வாங்கி உள்ளார். அதன் மூலம் தற்போது சென்னையில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்று, அதன் பின்பு அங்கு சட்டவிரோதமாக நிரந்தரமாக தங்குவதற்கும் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் முஜீப் உசேனை கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இந்தியாவுக்குள் 12 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேச ஆசாமி கைது: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றபோது சிக்கினார் appeared first on Dinakaran.