பட்டன்ரோஸ் விளைச்சல் அதிகரிப்பு

 

தர்மபுரி, நவ. 18:தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பட்டன் ரோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மல்லி, முல்லை, சாந்தி, பட்டன் ரோஸ், அரளி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர். பறிப்பிற்கு பின்னர் தர்மபுரி சந்தைக்கு சென்று, அங்கிருந்து பெங்களுரு, சென்னை, ஈரோடு, மற்றும் ஓசூர் பகுதிகளுக்கு பட்டன் ரோஸ் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் தர்மபுரி, வத்தல்மலை, தொப்பூர், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், விவசாயிகள் பட்டன் ரோஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டினர். தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியதும் கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டத்தில் பனி பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பட்டன் ரோஸ் பூக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கார்த்திகை மாதத்தையொட்டி தர்மபுரி மாவட்ட பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ பட்டன் ரோஸ் ₹200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோயில் திருவிழா, திருமண சுப நிகழ்வுகளால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் பட்டன் ரோஸ் ஒரு கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்டு, தற்போது ஒரு கிலோ கிலோ ₹200க்கு விலை கூடியது. தற்போது மீண்டும் அதிகரித்து கிலோ ₹800க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழச்சியடைந்துள்ளனர்.

 

The post பட்டன்ரோஸ் விளைச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: