இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு சாலையோர வியாபரிகளுக்கு குடையுடன் கூடிய கடை மற்றும் 500 பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார். இதனைத்தொடர்ந்து 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துனை செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட நிர்வாகிகள் மிதுன் சக்கரவர்த்தி, ராஜேஸ்வரி ரவீந்திரநாத், திருத்தணி நகர செயலாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவீந்திரா, சி.ஜெ.செந்தில்குமார், பி.டி.சந்திரன், என்.கிருஷ்ணன், கூளூர் எம்.ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* கொள்கை பாடல் வெளியீடு
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜே.உமாமகேஸ்வரன் 47 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதில் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் மாவட்ட இளைஞர்ணி துணை அமைப்பாளர் வி.ஜே.உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் இளைஞரணி கொள்கை பாடல் சிடி வெளியீட்டு விழா ஆவடியில் நடந்தது. அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் இந்த சிடியை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, பொதுக்குழு உறுப்பினர் விமல்வர்ஷன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் செந்தாமரை, கருணாநிதி, பிரியா குமார், அக்னி ராஜேஷ், முல்லை நவீன், கிளிக்கஸ் சந்தோஷ், சுமன், ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.