இதில், அவருக்கு இடுப்பு, கை, கால், எலும்பு, முறிவு ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனே ஹரிணியை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், சிறுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post காய வைத்த துணியை எடுத்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி appeared first on Dinakaran.