திருவள்ளூர்: இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நவம்பர் 26ம் தேதியான நேற்று திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சட்டநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கி ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகரத் தலைவர் ஜே.ஜோஷி பிரேம் ஆனந்த் வரவேற்றார். மாநில செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட முதன்மை துணை தலைவர்கள் தளபதி மூர்த்தி, சரஸ்வதி, மூர்த்தி, மாவட்ட பொருளாளர் மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் அருள், செல்வகுமார், வினோத், மாயாண்டி, செல்வம், வட்டார தலைவர்கள் எஸ். துஜித், பாலகிருஷ்ணன், முகுந்தன், கலை, பிரதாப், ராஜேஷ், புருஷோத், ஈகை தேவேந்திரன், நகர நிர்வாகிகள் ஹசின் பாஷா, விஜய், ஷபீர், பாலாஜி, சீனிவாசன் அன்பு, முகிந்தர், சுஜித், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டனர்.
The post வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியலமைப்பு சட்ட நாள் நிகழ்ச்சி appeared first on Dinakaran.