ஆழ்குழாய் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி துவக்கம்

போடி, நவ. 16: போடி நகராட்சி 19வது வார்டில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சபரிமலை தெரு அடுத்துள்ள ஒழுகால் பாதை 2வது தெருவில் குடிதண்ணீர் தவிர்த்து பிற தேவைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தங்கதமிழ்ச்செல்வன் எம்பி ஆலோசனையின் படி நமக்கு நாமே திட்டத்தின் வாயிலாக நகர் மன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி துவங்கியது. முதல் கட்டமாக போர்வெல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சியில் போடி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகராட்சி கமிஷனர் பார்கவி, பொறியாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆழ்குழாய் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: