குரங்கு குட்டிக்கு அவ்வப்போது சிகிச்சை அளிக்க வேண்டும். குரங்கு குட்டிக்கு சத்தான உணவு தரப்பட வேண்டும். எனவே, அந்த குரங்கு குட்டி பூரணமாக சுகமடையும் வகையில் எனது கட்டுப்பாட்டில் விடுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குரங்கு குட்டியை பார்வையிட கால்நடை மருத்துவருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நவம்பர் 9ம் தேதி கால்நடை மருத்துவர் வல்லையப்பன், தனது மகள் மற்றும் வழக்கறிஞருடன் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை பார்வையிட்டனர்.
இந்த நிலையில், வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தரப்பில் வழக்கறிஞர் ஶ்ரீனிவாசன் தாக்கல் செய்த அறிக்கையில், தற்போது, குரங்கு குட்டிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உரிய சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், சிகிச்சைக்காக மட்டுமே குரங்கு மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால், ராணிப்பேட்டையில் இருந்து கோவைக்கு சட்ட விரோதமாக குரங்கைக் கடத்தியதாகவும், அதிகாரிகள் சரணடையுமாறு தெரிவித்தும், மீண்டும் ஓசூருக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தை சரிபார்த்தபோது, மனுதாரர் பெயர் நீக்கபட்டிருந்ததாகவும், குரங்கு குட்டியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து நீதிபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் தரப்பில், குரங்கு குட்டியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
The post தெரு நாய்களால் கடிபட்ட குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.