குழந்தைகள் தினம்.. நமது உலகையும், வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: நமது உலகையும், வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் நவம்பர் 14ம் தேதி அன்று வருடந்தோறும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;

மழலை மாறாத சிரிப்புடன் – கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் – சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை!

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான – நலமான – பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம்!

நமது உலகையும் – வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

The post குழந்தைகள் தினம்.. நமது உலகையும், வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: