தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்குடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மாதம் ஒருமுறையாவது மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவில் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்த வேண்டும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அரசின் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்,”என்றார். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் துணை முதலமைச்சர். மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.
The post தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.