இதை எதிா்த்து தேவி தொடுத்த வழக்கில் முதலில் கொடுத்த சான்றிதழ் செல்லும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து பிரியதா்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
இதையடுத்து, மாவட்டத் தோ்தல் நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஊராட்சிமன்றத் தலைவராக தேவி பொறுப்பேற்றாா்.மாவட்டத் தோ்தல் சிறப்பு நீதிமன்றத்தில் பிரியதா்ஷினி தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் பிரியதா்ஷினி வெற்றி பெற்றதாக பு தீா்ப்பளித்தாா். எம்எல்ஏ மனைவி தேவி ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டது.
விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேவி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின் போது, “2019-ல் நடந்த சங்கராபுரம் ஊராட்சி தேர்தலில் 62 வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. சிறிது நேரத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்,” இவ்வாறு தேவி தரப்பு தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள், தேவியின் வெற்றி செல்லாது என்றும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி செல்லும் என ஆணையிட்டனர். கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டது.
The post காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள தேவியின் வெற்றி செல்லாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.