தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷாவுடன் பேசினேன்; இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் நேற்று இரவு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை தொடங்கும். தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக நாளை பியூஷ் கோயல் சென்னை வருகிறார். தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை.

4 நாட்களில் அனைத்தும் தெரியும். 4 நாட்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்து யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என அறிவிக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்களோ அல்லது அவர்கள் எங்களுடனோ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுகவுடன் சேர வேண்டிய கட்சிகள் சேர்ந்துவிட்டன. இனி புதிய கட்சிகள் சேர வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

Related Stories: