1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

சென்னை: 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. ஏப். 16 முதல் மே 31 வரை 45 நாட்களுக்கு கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இவ்வாண்டு தேர்வுகள் முன்கூட்டியே நடைபெற உள்ளது.

அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி தேர்வுகள் நிறைவடைகின்றன. அதேபோல், 4ம் மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி தேர்வுகள் நிறைவடைகின்றன.

6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 16ம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைகின்றன.

6ம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைந்து 17ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன்பிறகு 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: