பிறகு தனிப்படையினர் பவன் மூலம் பெங்களூருவில் உள்ள போதை பொருள் சப்ளை ஏஜென்டான டோசன் ஜோசப் (28) என்பவரை தொடர்பு கொண்டு, மெத்தம்பெட்டமைன் போதை பொருள் வேண்டும் என்று தனிப்படையினர் பேசவைத்து நேற்று பெங்களூருவில் வைத்து டைசனை கைது செய்தனர்.
தொடர்ந்து, இருவரிடம் இருந்தும் 19 கிராம் மெத்தம்பெட்டமைன், 99 கிராம் மலனா கஞ்சா பேஸ்ட் மற்றும் கிரீம், 95 மி.லி கஞ்சா ஆயில், 21 கிராம் ஓஜி கஞ்சா மற்றும் 12 எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. டைசன் மற்றும் பவன் மூலம் துணை நடிகை மீனா தனது ஆண் நண்பரான தாமஸ் உதவியுடன் மெத்தம்பெட்டமைன் மற்றும் உயர் ரக கஞ்சாவை பெற்று சினிமா வட்டத்தில் உள்ள நடிகைகளுக்கு ஆர்டர் பெயரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் பின்னணியில் சென்னையில் மேலும் பலர் இருப்பதாக கைது செய்யப்பட்ட பவன் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே அவர்களை கூண்டோடு கைது செய்ய தனிப்படை போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், துணை நடிகை மீனாவிடம் ரெகுலராக போதை பொருட்கள் பெற்று பயன்படுத்தி வந்த நடிகைகளிடமும் விசாரணை நடத்த தனிப்படையினர் முடிவு செய்துள்ளனர். அதில் சில நடிகைகள் அதிகளவில் மெத்தம்பெட்டமைன் வாங்கியுள்ளனர். இதனால் அவர்கள் யாருக்காக மெத்தம்பெட்டமைன் வாங்கினார்கள் என்ற சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாக சிறையில் உள்ள துணை நடிகை மீனாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து ள்ளனர். போதை பொருளுக்கு அடிமையான முன்னணி நடிகைகள் பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post துணை நடிகை மீனாவுக்கு போதை பொருள் விற்ற பெங்களூரு முக்கிய ஏஜென்ட் உள்பட 2 பேர் அதிரடி கைது: மொத்தமாக வாங்கிய நடிகைகளிடம் விசாரிக்க போலீஸ் முடிவு appeared first on Dinakaran.