இஸ்ரேலை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்: 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதால் பதற்றம்

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களால் பெரும் பதற்றம் நிலவுகிறது. காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடந்து வரும் நிலையில் லெபனானில் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு பெற்று ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளையும் தாக்கி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப்படை இருந்ததாக லெபனான் குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப்படை இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று ஒப்புக்கொண்டார். இதனால் கடும் கோபம் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 150க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலை மேற்கொண்டனர். ஏவுகணைகள் ஹைபா, கிரியாய்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தாக்கியதில் பலர் காயம் அடைந்தனர். ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தாக்குதல் தொடர்பான காணொளிகளை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இதற்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனால் லெபனான் முழுவதுமாக உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

 

The post இஸ்ரேலை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்: 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதால் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: