நெல்லை,நவ.12: நெல்லை டவுன் எஸ்ஐ ஹரிசந்திரராஜ் மற்றும் போலீசார் தொட்டி பாலம் அருகே நேற்று ரோந்து சென்றனர். அப்போது டவுன் வாய்க்கால் பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பகத்சிங் தெருவை சேர்ந்த உலகநாதனின் மகன் முருகன் (38) என்பதும், கஞ்சாவை பதுக்கிவைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய சோதனையில் 30 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், முருகனை கைதுசெய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் ரூ.300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.