ராமநாதபுரம், நவ.10: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில், அயோடின் விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவு விழா நடைபெற்றது. விழாவில் மேலாண்மைத்துறை பேராசிரியர் ஜெயபாலன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மேலாண்மைத்துறை துறைத்தலைவர் தலைவர் மெய்கண்ட கணேஷ்குமார் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக இளங்கோ, உணவு பாதுபாப்புத் துறை அலுவலர் ஜெயராஜ் மற்றும் வெண்ணிலா ஆகியோர் கலந்துகொண்டனர். பெரோஸ்கான் அயோடின் குறித்து விழிப்புணர்வை எடுத்துரைத்தார். சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், கல்லூரி அரங்கில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் கல்லுாரி மாணவ,மாணவிகள் சிறுதானிய உணவுகளை தயார் செய்து பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. உணவுகளில் சிறப்பாக தயாரித்த உணவுகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இளங்கோ பரிசுகளை வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்கழக தலைவர் மாதவன் கலந்து கொண்டார். இவ்விழாவின் முடிவில் பேராசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.
The post செய்யது அம்மாள் கல்லூரியில் அயோடின் விழிப்புணர்வு விழா appeared first on Dinakaran.