எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்: முன்னாள் பிரதமர் தேவகவுடா சொல்கிறார்

பெங்களூரு: எனது கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு மேகதாது திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதியை பெற்றுத் தருவேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். ராம்நகர் மாவட்டம் சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில் நிகில்குமாரசாமி போட்டியிடுகிறார். நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிகில்குமாரசாமிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

மேகதாது திட்டம் அமல்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். பிரதமர் நரேந்திரமோடி நினைத்தால் மட்டுமே இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியும். கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேகதாது அணை கட்டுவதற்கு 100 சதவீதம் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது கடைசி மூச்சை விடுவதற்குள் மேகதாது அணை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திரமோடியிடம் அனுமதி பெற்றுத்தருவேன். அதே நேரம் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.

சென்னபட்டணா தாலுகா இக்கலூரு அணை கட்டியது சாதனை கிடையாது. மாநில விவசாயிகளின் நலனுக்காக மேகதாது அணை கட்டுவது தான் உண்மையான சாதனை ஆகும். பிரதமர் நரேந்திரமோடி மனதை மாற்றி அணை கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். 92 வயதான நான் 18 வயது போல் உற்சாகமாக செயல்படுகிறேன் என்றால் அதற்கு தொண்டர்களின் ஆதரவு தான் காரணமாகும். இவ்வாறு தேவகவுடா கூறினார்.

 

The post எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்: முன்னாள் பிரதமர் தேவகவுடா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: