நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிவர்த்தி செய்ய வேண்டும்

நாகப்பட்டினம்,நவ.8: நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் மோசமாக உள்ள அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமையில் செயலாளர் முகமதுசலீம், பொருளாளர் தாதாசரீப் ஆகியோர் நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் லீனாசைமனை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டின் தலைசிறந்த மாவட்டமாகவும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவது நாகப்பட்டினம் மாவட்டம். ஆனால் நாகப்பட்டினம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. புகழ்பெற்ற நாகூர் மற்றும் தலைநகர் பகுதியான நாகப்பட்டினம் நகர பகுதியில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாகவுள்ளது.

எனவே நாகப்பட்டினம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் தேங்கி மேடுகளாக காட்சி தருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிந்து வருகிறது. நாய்கள் தொல்லையால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகூர் தர்கா அலங்கார வாசல் முகப்பில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடுகளை ஏற்படுத்துகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து நாகூர் தர்காவிற்கு வருகை தருவோர்கள் சிரமம் அடைகின்றனர். பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர இன்னும் மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் நாகூர் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் உள்ள பொதுகழிப்பிடங்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிவர்த்தி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: