இந்தக் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாய் குறித்து விசாரித்தபோது, ‘சண்டையிட்ட இரண்டு மாடுகளில், ஒரு மாடு தனது வீட்டு எஜமான் வளர்க்கும் மாடு என்பதும், தன்னோடு வீட்டில் இருக்கும் பிராணி என்ற காரணத்தினால் தன் விசுவாசத்தை காட்டி நாய் கடுமையாக முயன்று சண்டையை விலக்க போராடியதும் தெரிய வந்தது. விபத்து, கொலை, சண்டை என நம் கண்முன் பல சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறினாலும் அதை கண்டு கொள்ளாமல் செல்லும் மனிதர்கள் மத்தியில் நன்றியுள்ள நாயின் போராட்டம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post மாடுகளின் சண்டையை விலக்கிய நாய்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.