சில்வார்பட்டியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சிறப்பு முகாம்: இன்று நடக்கிறது

தேனி, நவ.6: தேனி மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு பதிவு முகாம் இன்று நடக்கிறது. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் வீட்டு வேலைசெய்யும் பணியாளர்களுக்காக தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களை உறுப்பினராக பதிவு செய்வதற்கும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு பதிவு முகாம் இன்று பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் நடக்க உள்ளது.

புதிய உறுப்பினர் பதிவிற்காக அலைபேசி எண் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வயதுக்கான ஆவணம் (வாக்காளர் அடையாள அட்டை, பள்ளிசான்றிதழ்) தேசியமயமாக்கப்பட்ட வங்கி புத்தகம், பாஸ்போர்ட் சைஸ்போட்டோ ஆகியோருடன் < www.tnuwwb.tn.gov.in > என்ற இணையதளம் மூலம் சிறப்பு முகாமில் நேரில் வந்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் இம்முகாமில் புதிய உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என தேனி தொழிலாளர் உதவி ஆணையர்(பொறுப்பு) மனுஜ் ஷ்யாம் ஷங்கர், வாழ்ந்து காட்டுவோம் திட்ட் மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாணண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

The post சில்வார்பட்டியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சிறப்பு முகாம்: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: