குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, நவ. 6: ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களில் பணியாற்றிட விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இதில், கணக்காளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைபட்டம் (வணிகவியல், கணிதம்) பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும். சமூக பணியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (சமூக பணி, சமூகவியல், சமூக அறிவியல்) பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணக்காளர், சமூக பணியாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.18,536 வழங்கப்படும்.

புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து அல்லது அதற்கு சமமான வாரியத்திலிருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும. நல்ல தகவல் தொடா்பு திறன் இருக்க வேண்டும். பணி அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த மூன்று பணிகளுக்கும் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்த பணிகளுக்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் erode.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பணிகளுக்கு அதற்கு உண்டான விண்ணப்ப படிவத்தில் புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம் (6வது தளம்), ஈரோடு மாவட்டம்-638011 என்ற முகவரிக்கு வருகிற 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது. இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

The post குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: