வேதாரண்யத்தில் தொடர்மழை 8000 உப்பள பாத்திகள் தண்ணீரில் மிதக்கிறது

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் 3வது நாளாக மழை பெய்து வருகிறது. உப்பளங்களில் தண்ணீர் புகுந்ததால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி, ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கரியாப்பட்டினம், செம்போடை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 3வது நாளாக அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.வேதாரண்யம் பகுதியில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் உப்பள பாத்திகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கும் என தொழிலாளர்கள் அச்சத்துடன் உள்ளனர். வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் காலை 8 முதல் நேற்று காலை 8 மணி வரை 86.8 மி.மீட்டர், கோடிக்கரையில் 99.2.மி.மீ மழை பெய்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது….

The post வேதாரண்யத்தில் தொடர்மழை 8000 உப்பள பாத்திகள் தண்ணீரில் மிதக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: