அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியாளர்களை நியமிக்க போக்குவரத்துத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 537 தொழில்நுட்ப பணியாளர்கள் இடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 307 டிசிசி, 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என்று மொத்தம் 769 இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post அரசு போக்குவரத்து கழகங்களில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: