கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் சம்மன் அனுப்ப மனித உரிமைகள் ஆணையம் திட்டம்!!

சென்னை : விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் சம்மன் அனுப்ப மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்குவோரின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் கடந்த மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பல்வீர் சிங் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி 5 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணைய எஸ்.பி.ஜெயலட்சுமிக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங்கிற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் சம்மன் அனுப்ப மனித உரிமைகள் ஆணையம் திட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: