கோயில் அருகே வசிப்போர் பட்டாசு வெடிக்க வேண்டாம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வேண்டுகோள்

மதுரை: கோயில் அருகே வசிப்போர் பட்டாசு வெடிக்க வேண்டாம் என மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். எனவே விரைவில் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான சிறப்பு பூஜைகள், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதற்காக கோயில் கோபுரங்களை சுற்றி திரைத்துணி சுற்றப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு அருகாமையில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் பக்தர்கள் கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி தீபாவளி அன்று வாணவேடிக்கையின் போது எளிதில் தீப்பற்றக்கூடிய, ஆபத்தை விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post கோயில் அருகே வசிப்போர் பட்டாசு வெடிக்க வேண்டாம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: