இந்த நிலையில், டெலாவரில் உள்ள வாக்குச் சாவடியில் அதிபர் ஜோபிடன் தனது வாக்கினை பதிவு செய்தார். 45 நிமிடம் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஜோபிடன் ஜனநாயக கடமை ஆற்றினார். அதிபர் தேர்தல் நாளான நவம்பர் 5ம் தேதி வாக்குச் சாவடிகளுக்கு செல்ல முடியாத அமெரிக்க குடிமக்கள் தபால் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இதுவரை தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு மற்றும் தபால் மூலமாக மட்டும் 2.5 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தார் ஜோபிடன் : 45 நிமிடங்கள் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார்!! appeared first on Dinakaran.
