கூட்டணிப் பேச்சை தொடங்கும் பியூஷ் கோயல்: பாஜக அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதால் அதிமுக அதிர்ச்சி

 

சென்னை: பாஜக அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழக தேர்தல் பணிகளை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே அமித் ஷா இம்மாத இறுதிக்குள் தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ள நிலையில் கோயல் முதல்கட்ட பேச்சை எடப்பாடியுடன் தொடங்க உள்ளார். பாஜக மையக் குழு கூட்டத்துக்குப் பின் நேற்று சென்னையில் நயினார், வரும் 23ம் தேதி’ கோயல் சென்னை வர உள்ளதாக கூறியிருந்தார்.

ஒன்றிய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அடுத்த வாரம் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஒரு வாரத்தில் பியூஷ் கோயல், கூட்டணி பேச்சை தொடங்குகிறார். அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பழனிசாமியுடன் பேச பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதி எண்ணிக்கைகள் குறித்தும் பழனிசாமியுடன் பேச உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக 80 தொகுதிகளுக்கு மேல் கேட்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பாஜக வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 54 தொகுதிகளை குறி வைத்துள்ளது. அதிமுகவுக்கு 21%, பாஜகவுக்கு 18% வாக்கு உள்ளதாக அமித் ஷா ஏற்கனவே கூறிய நிலையில் பியூஷ் கோயல் அதிக தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளார். பாஜக அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: