மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கண்காட்சியினை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2025) சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிட வாடிக்கையாளர்களை வாடிக்கையாளர் ஊக்குவிக்கும் அறிமுகப்படுத்தினார். வகையில் அட்டைகளை
இந்த வாடிக்கையாளர் அட்டையின் மூலம் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டு. 500 மதிப்புப் புள்ளிகள் சேர்ந்தவுடன் 500 ரூபாய்க்கு சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், கடந்த மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவினை சிறப்பாக நடத்தியதற்காக சுய உதவிக் குழுவினர். சிறப்பாக செயலாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பத்திரிகையாளர் நண்பர்களுக்கு வணக்கம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய குழுக்கள் பங்குபெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு, கண்காட்சி இங்கு நடத்தப்படும்.

அந்த கண்காட்சி இங்கே இன்று திறந்து வைக்கப்படுகின்றது. இன்று முதல் ஜனவரி 4ஆம் தேதி வரைக்கும் கிட்டத்தட்ட 18 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும். இதில் 72 சுய உதவிக்குழுக்களைக் கொண்டு 50 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விற்பனைக்காக 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் மூலம் இங்கே காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த கண்காட்சியில் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு நம்முடைய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றது. நம்முடைய அரசு அமைவதற்கு முன்பாக பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கின்ற பொருட்கள் வருடத்திற்கு அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி இருந்தது.

அதன் பிறகு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டத்திற்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று. அவர்கள் எவ்வளவு விற்பனை செய்கின்றார்களோ, உயர்த்துவதற்காக பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கின்றோம். அதை சட்டமன்றத்தில் பேசும்போது, நான் குறிப்பிட்டு பேசினேன். இந்த வருடம் எங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கக்கூடிய இலக்கு 600 கோடி என்று சொன்னார்கள். இதற்கு முந்தைய வருடம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தோம்.

இந்த ஆண்டு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 690 கோடி ரூபாய்க்கு விற்பனை ஏற்கனவே நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எனவே இலக்கைவிட அதிகமாக நம்முடைய சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் அதிகமாக விற்பனை செய்திருக்கிறார்கள். அதற்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு 6 மாதங்களுக்கு முன்பு முதன்முறையாக சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு அவர்களுடைய புகைப்படம், பெயர், அவர்கள் குழுவின் பெயர் சேர்த்து அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள். அவர்கள் தயார் செய்கின்ற பொருட்களை பக்கத்து ஊரிலோ அல்லது பக்கத்து மாவட்டத்திற்கோ எடுத்து சென்று விற்பனை செய்வதற்கு போக்குவரத்து செலவுகள், கட்டணமின்றி, 25 கிலோ வரை இலவசமாக பேருந்தில் எடுத்துச் செல்லலாம்.

அதே மாதிரி கோ -ஆப்டெக்ஸில் சலுகைகள், ஆவினில் அவர்களுக்கு சலுகைகள் இப்படி அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுத்திருக்கிறோம். 50 இலட்சம் சுய உதவிக்குழு சகோதரிகளில், கிட்டத்தட்ட 22 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. இங்கே வந்திருக்கின்ற பல சகோதரிகள் அந்த அட்டைகளை என்னிடம் காண்பித்து, அதனால் என்னென்ன பலன் அடைகின்றார்கள் என்று பெருமையாக சொன்னார்கள்.

அனுபவ அதுமட்டுமல்ல, விற்பனையை அதிகரிப்பதற்கு, மதி அங்காடிகள் Lov மாவட்டங்களில் உள்ளது. அதில் வருடம்தோறும் விற்பனையை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு வெகுமதி புள்ளி அட்டைகள் (Reward point card) கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, பொதுமக்கள். தனியார் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் வந்து, இது போன்ற விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில், விழா நாட்களில் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, மொத்தமாக வாங்கி பரிசளிப்பார்கள், அப்படி கொடுக்கும்போது இங்கே வந்து பார்த்து, இங்கு இருக்கக்கூடிய பொருட்களை அவர்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு வாங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் அனைவரின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை இயக்க அலுவலர் ஆஷா அஜித், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: