முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி தோட்டத்தில் வாழைப்பழங்கள்

 

முத்துப்பேட்டை, அக்.29: முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் அரசு பள்ளி தோட்டத்தில் இயற்கை உரத்தில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைத்து மாணவர்கள் பராமரிக்கின்றனர். இதில் பலவிதமான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இங்கு வாழைமரங்களும் உள்ளன. இதில் வாழைமரத்தில் வாழ்தார் போட்டு மரத்தில் இயற்க்கையாக பழுத்து வந்தது. இந்தநிலையில் நேற்று பள்ளியில் நடந்த வாழைப்பழத்தின் மகத்துவம் குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன், பள்ளி தோட்டத்தில் இயற்கை உரத்தில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

The post முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி தோட்டத்தில் வாழைப்பழங்கள் appeared first on Dinakaran.

Related Stories: