×

பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

 

கோவை, அக்.29: கோவை பீளமேட்டில் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் பிஎஸ்ஜி மாணவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. அங்குள்ள மாணவர்களுக்கு ஆடைகள், இனிப்பு மற்றும் பசுமை பட்டாசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், பிஎஸ்ஜி கேர் நிறுவனத்தின் இயக்குநர் ருத்ரமூர்த்தி, பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீவித்யா அறக்கட்டளையை சேர்ந்த அனைத்து உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,PSG ,Coimbatore ,PSG Student Home ,PSG Foundation ,Beelamet ,Dinakaran ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?