×

காய்கறி சந்தையாக மாறும் வெள்ளலூர் பஸ் நிலையம்

 

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் செட்டிபாளையம் சாலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையம், மாநகராட்சிக்கு சொந்தமான 61.81 ஏக்கர் பரப்பளவில் ரூ.52.46 கோடியில், மாநகராட்சி பொது நிதியில் இருந்து கட்டப்பட்டு, தற்போது பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளது. சென்னைக்கு அடுத்து பெரிய நகராக வளர்ந்துள்ள கோவையில், சென்னை கோயம்பேடு போன்ற பெரிய காய்கறி மற்றும் பழங்களுக்கான ஒருங்கிணைந்த மொத்த விற்பனை சந்தை இல்லை.

எனவே, இப்பஸ்நிலையத்தின் பயன்பாட்டை மாற்றி, இங்கு மொத்த காய்கறி அங்காடிகள், மொத்த பழ அங்காடிகள், கனரக வாகன பதிவு அலுவலகம், பார்சல் அலுவலகங்கள், கனரக வாகனம் நிறுத்தும் இடம் போன்றவை அமைக்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் மக்கள் தொகை ெகாண்ட கோவை மாநகராட்சி மக்களும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 14 லட்சம் மக்களும் பயன்அடைவார்கள். மேற்கண்ட தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறியது.

The post காய்கறி சந்தையாக மாறும் வெள்ளலூர் பஸ் நிலையம் appeared first on Dinakaran.

Tags : Vellalur ,Coimbatore ,Chettipalayam Road, South Zone ,Coimbatore Corporation ,Dinakaran ,
× RELATED தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு